BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
ரூ.22,000 கோடி கடனுக்கு ரூ.6.5 கோடி திருப்பி செலுத்தினால் போதுமா? தொழிலதிபர் வழக்கில் புதிய உத்தரவு
சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் வழக்கில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த கோரிக்கைத் தொகை ₹22,006.57 கோடியாகும். கடன் வழங்குநர்களுக்கு ₹6.25 கோடியும், இந்த நடவடிக்கைக்கான செலவுகளுக்காக ₹25 லட்சமும் வழங்குவதற்கு தீர்வுத் திட்டம் முன்மொழிகிறது. இதுகுறித்த என்சிஎல்டி-யின் புதிய உத்தரவு என்ன?
'நிலவின் மேற்பரப்பு போல தெரிகிறது': பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு - சுமார் 600 சுரங்க தொழிலாளர் கதி என்ன?
நேபாளத்தின் திரிசூலி ஆற்றுப் பகுதியில் அமைந்த நீர்மின் நிலைய சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. வெடிபொருட்களைப் பயன்படுத்தி மலைப்பகுதியைத் தகர்த்து தொழிலாளர்களை அடைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
2004-ல் சோனியா பிரதமராவதை ராகுல் எதிர்த்ததால் மன்மோகன் பிரதமராக்கப்பட்டாரா? சுயசரிதை மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தயக்கத்துடன் அரசியலுக்குள் வந்த வெளிநபராக இருந்து, இந்தியாவின் மிகப் பழமையான அரசியல் கட்சியான காங்கிரஸில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உயர்ந்த அரசியல் பயணத்துக்குப் பிறகு, சோனியா காந்தி தனது சொந்த கதையை தற்போது பகிர்ந்துகொள்கிறார்.
பாகிஸ்தான் அணியில் 7 வீரர்கள், தலைமைப் பயிற்சியாளர் திடீர் நீக்கம் - தொடருக்கு நடுவே நடவடிக்கை ஏன்?
இங்கிலாந்துக்கு எதிரான தொடரைத் தோல்வியுடன் முடித்த பாகிஸ்தான், அதிரடி நடவடிக்கையாக 7 வீரர்களை அணியில் இருந்து நீக்கியதுடன், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகாத 5 வீரர்களை அணியில் சேர்த்து, தலைமைப் பயிற்சியாளரையும் விடுவித்துள்ளது.
காணொளி, நேபாளம்: ஆற்றில் அடித்து வரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பு, கால அளவு 3,41
நேபாள வெள்ளத்தில் சித்வான் ஆற்றில் 300-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய உடல்களை மீட்க நேபாள ஆயுதக் காவல் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 49 பேரின் நிலை என்ன? 5 நாளாகியும் தெரியாததால் குடும்பத்தினர் கவலை
சென்னையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவர் சென்ற 49 பேரின் நிலை குறித்து 5 நாட்களுக்கும் மேலாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
வீட்டிலேயே சுவாச பரிசோதனை செய்வது யாருக்கெல்லாம் ஆபத்தாகக் கூடும்? 7 முக்கிய விஷயங்கள்
நீங்கள் இருக்கும் இடத்திலேயே செய்யப்படும் இத்தகைய மூச்சு பரிசோதனைகள் உண்மையிலேயே உங்கள் நுரையீரலின் செயல்திறனை அறிய உதவுமா? இத்தகைய சோதனைகளை எல்லோரும் செய்யலாமா என்ற கேள்வி கூட எழலாம்.
'இனி கொடுப்பதற்கு எதுவும் இல்லை' - சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்த மெஸ்ஸி
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மதுரை அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை - பள்ளியில் என்ன நடந்தது? தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
உசிலம்பட்டியில் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் தலித் மாணவியை திட்டியதாக எழுந்த புகாரில் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
'நான் ஏதாவது கொடுக்கலாம் என வந்தேன், ஆனால் அதிகம் பெற்றுவிட்டேன்' - உத்தரப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரி ராஜிநாமா
உத்தரப் பிரதேச கேடரைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரியான திவ்யா மிட்டல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது உத்தரப் பிரதேச அரசின் வருவாய்த்துறையில் சிறப்பு செயலாளராக அவர் பணியாற்றி வருகிறார்.
காணொளி, நேபாள வெள்ளம்: அதிக சேதம் அடைந்த திரிசூலி எப்படி இருக்கிறது? , கால அளவு 5,59
நேபாள வெள்ளத்தில் கடுமையான பாதிப்புகளை சந்தித்த திரிசூலி பகுதியிலிருந்து நேரடி கள நிலவரத்தை வழங்குகிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் சிராஜ்
பெற்றோரிடம் ஒரு குழந்தைக்கு மட்டும் முன்னுரிமையா? உடன்பிறப்புகள் தகராறை தீர்க்க 7 வழிகள்
உங்கள் பெற்றோருக்கு மிகவும் பிடித்த குழந்தை என்று ஒருவரை நினைத்து, அவருக்கே அதிக பணம், பரிசுகள் அல்லது உதவிகளை வழங்குகிறார்களா?
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு புடவையை கழற்றி கீழே நீட்டினார்' - நேபாளத்தில் உயிர் தப்பிய சென்னை தம்பதி
நேபாள் பெரு வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய தம்பதியினரின் அனுபவங்கள் இந்தக் கட்டுரை கூறுகிறது.
கைலாய யாத்திரை சென்ற தமிழர்களுக்கு வழிகாட்டியாக சென்ற இஸ்லாமியர் - தந்தையுடன் கடைசியாக என்ன பேசினார்?
"எனக்கு வரும் எல்லா அழைப்புகளையும் எடுக்கிறேன். சிலர் என்னை அழைத்து திட்டுகின்றனர். ஆனாலும் அவற்றை நான் எடுக்க காரணம், ஏதேனும் ஒரு அழைப்பிலாவது எனது மகன் உமர் ஃபாரூக்கின் குரல் கேட்டுவிடாத என்பதற்காக தான்" என்கிறார் சையது சாதிக்.
அறுவை சிகிச்சைக்கு முன், சில நேரம் நோயாளியின் சாதியை கேட்கும் மருத்துவர்கள் - எதற்காக தெரியுமா?
செட்டியார் சமூகத்தினரிடம் காணப்படும் ஒரு என்சைம் குறைபாடு காரணமாக அவர்களுக்கு மயக்க மருந்து அளிக்கும் போது மருந்து தேர்வு செய்து வழங்கப்படுகிறது
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கம் பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியையே அசைத்துப் பார்க்கிறதா? ஓர் அலசல்
'இட ஒதுக்கீட்டை நீக்கு' இயக்கம் என்ற பெயரில் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றதன் காரணமாக, இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் மீண்டும் இந்திய அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. ஆனால் பாஜகவுக்கு இது வெறும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய விவாதம் மட்டுமல்ல, அக்கட்சி எதிர்கொள்ளும் ஒரு பெரிய அரசியல் சவாலாகவும் உள்ளது.
இந்த இரு பெண்களும் நேபாள எல்லை கடந்து சீனாவுக்குள் நுழைந்தார்களா? விடை தேடும் சொந்தங்கள்
"சீன அரசிடம் இருந்து எனக்கு ஒரு பட்டியல் வேண்டும். காணாமல் போனவர்கள், உயிரிழந்தவர்கள், மீட்கப்பட்டவர்கள் என அனைவரின் விவரங்களும் எனக்குத் தேவை. எங்களுக்கு சமீபத்திய தகவல்கள் தேவை. நாங்கள் தூக்கமில்லாத இரவுகளை கழித்து வருகிறோம். எங்கள் நேரம் முழுவதையும் தொலைபேசியிலேயே செலவிடுகிறோம்"
'பனிப்பாறை உடைந்து விழுந்தது' - ஆறுகளில் 30 நிமிடத்தில் சுமார் 30 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததாக தகவல்
பனிப்பாறைகள் உருகுவதே திடீர் வெள்ளப்பெருக்குகளுக்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதிகின்றனர். விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் - திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே நடந்த விவாதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா?
'ஆடு தேடிச் சென்றேன்; தங்கம் கிடைத்தது': சிறிய கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டை
மேற்கு கென்யாவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு மேய்ப்பவர் பிபிசியிடம் பேசுகையில், தனது தற்செயலான தங்கக் கண்டுபிடிப்பால் கடந்த சில வாரங்களாக தங்களது சிறிய கிராமம் தங்கம் தேடும் ஆயிரக்கணக்கான நபர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார். அங்கே என்ன நடக்கிறது?
சென்னையில் இன்றும் வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தனித்துவமான வாழ்க்கை பற்றி தெரியுமா?
15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் அதற்குப் பின்னரும், இந்தியாவில் வசித்த ஐரோப்பிய ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்தபோது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 'லுசோ-இந்தியர்கள்' (Luso-Indians), 'டோபாஸ்கள்' (Topasses) மற்றும் 'மெஸ்டிசோக்கள்' (Mestiços) என்று அழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் 'ஆங்கிலோ-இந்தியர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்
காதல், காமம் இல்லாத மண வாழ்க்கை: 'பிளேட்டோனிக்' பந்தத்தில் இணைந்த இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
ரெனி மற்றும் ஏப்ரல் தங்களுக்கு 12 வயதாக இருந்தபோது சந்தித்து சிறந்த தோழிகளாகினர்; இருவருக்கும் இடையே உள்ள உறவு காதலோ உடலுறவோ இல்லாமலேயே அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த்து.
கீழடி நாகரிக மக்களின் வழித்தோன்றல்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? டிஎன்ஏ ஆய்வில் புதிய தகவல்
கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் மேகேதாட்டு அணை திட்டம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































